செயலி Exposé

ஒரு குறிப்பிட்ட செயலியில் திறந்திருக்கும் எல்லாச் சாளரங்களையும் “செயலி Exposé” காட்டும்.

செயலி Exposéஐத் திறக்க, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • Exposéஐத் திறந்து, காட்டப்படும் சாளரங்களில் ஒன்றில், செயலி ஐகானைத் தட்டவும்.

  • முகப்புத் திரையில், Dock அல்லது செயலி லைப்ரரியில் உள்ள செயலி ஐகானைத் தொட்டுப் பிடித்து, “அனைத்துச் சாளரங்களையும் காட்டு” என்பதைத் தட்டவும்.

  • திறந்திருக்கும் செயலியில், மெனு பாரைத் திறந்து, “சாளரம்” மெனுவைத் தட்டி, “அனைத்துச் சாளரங்களையும் காட்டு” என்பதைத் தேர்வுசெய்யவும்.

மேலும் செயலிகளைப் பார்க்க, வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும். செயலி Exposéஐ மூட, திரையைத் தட்டவும் அல்லது முகப்பு பட்டனை அழுத்தவும் (முகப்பு பட்டன் உள்ள iPadஇல்).