iPadஇல் FaceTime அழைப்புகளைச் செய்தல்

இணைய இணைப்பு மற்றும் Apple கணக்கு மூலம் FaceTime செயலியில் அழைப்புகளைச் செய்யலாம், பெறலாம்.

iPadஇன் Wi-Fi + Cellular மாடல்களில், நீங்கள் மொபைல் டேட்டா இணைப்பு மூலமும் FaceTime அழைப்புகளைச் செய்யலாம். (அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் பொருந்தும்.) இந்த அம்சத்தை ஆஃப் செய்ய, அமைப்புகள்  செயலிக்குச் சென்று, “மொபைல் சேவை” என்பதைத் தட்டி, FaceTimeஐ ஆஃப் செய்யவும். மொபைல் டேட்டா அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

குறிப்பு: FaceTime ஆடியோ அழைப்புகள் அம்சம் குறிப்பிட்ட சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது.

FaceTime அழைப்பைச் செய்தல்

  1. iPadஇல் FaceTime செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் மேற்புறத்திற்கு அருகில் உள்ள “புதிது” என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் அழைக்க விரும்பும் நபரின் பெயர், எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு, வீடியோ அழைப்பைச் செய்ய FaceTime என்பதைத் தட்டவும் அல்லது FaceTime ஆடியோ அழைப்பைச் செய்ய “அழைப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

    மாற்றாக, தொடர்புகளைத் திறந்து அதிலிருந்து அழைப்பைத் தொடங்க “தொடர்பைச் சேர்” பட்டன்-ஐத் தட்டவும்; அல்லது பரிந்துரைக்கப்பட்ட தொடர்பு மீது தட்டி விரைவாக அழைப்பைச் செய்யலாம்.

பலரை அழைக்க, iPadஇல் குழு FaceTime அழைப்பைச் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

Siri: Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற எதையேனும் சொல்லுங்கள்: Call Eliza’s mobile.” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

உதவிக்குறிப்பு: FaceTime வீடியோ அழைப்பின்போது மேலும் பார்க்க, iPadஐத் திருப்பி கிடைமட்ட திசையமைவில் பயன்படுத்தவும். திரைத் திசையமைப்பை மாற்றுதல் அல்லது லாக் செய்தல் என்பதைப் பார்க்கவும்.

வீடியோ மெசேஜைப் பதிவுசெய்தல்

உங்கள் FaceTime வீடியோ அழைப்பிற்கு யாராவது பதிலளிக்கவில்லை என்றால், நீங்கள் தெரிவிக்க விரும்புவதைத் தெரிவிக்க வீடியோ மெசேஜைப் பதிவுசெய்யலாம்.

  1. “வீடியோவைப் பதிவுசெய்” என்பதைத் தட்டி, 5 முதல் 1 வரையிலான கவுண்ட்டவுன் முடிந்தவுடன் உங்கள் மெசேஜைப் பதிவுசெய்யவும்.

    அழைக்கப்படும் நபரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதைக் காட்டும் “வீடியோவைப் பதிவுசெய்” திரை. திரையில் “மீண்டும் அழை” பட்டனும், வீடியோ மெசேஜைப் பதிவுசெய்ய நீங்கள் தட்டக்கூடிய “வீடியோவைப் பதிவுசெய்” பட்டனும் இருக்கும்.
  2. உங்களின் பதிவுசெய்யப்பட்ட மெசேஜை அனுப்ப “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும் அல்லது மெசேஜை மீண்டும் பதிவுசெய்ய “மீண்டும் எடு” என்பதைத் தட்டவும். “சேமி” என்பதைத் தட்டி, ஃபோட்டோஸ் செயலியிலும் வீடியோ மெசேஜைச் சேமிக்கலாம்.

    உங்கள் வீடியோ மெசேஜை நீங்கள் அனுப்பிய பிறகு, பெறுநருக்குத் தெரிவிக்கப்படும்.

    குறிப்பு: சேமிக்கப்பட்ட தொடர்புகள், நீங்கள் அழைத்த நபர்கள், Siri பரிந்துரைத்த நபர்கள் ஆகியோரிடமிருந்து மட்டுமே நீங்கள் வீடியோ மெசேஜ்களைப் பெற முடியும்.

    வீடியோ மெசேஜைப் பார்த்தல் அல்லது வாயிஸ்மெயிலைக் கேட்டல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

வாயிஸ்மெயிலை அனுப்புதல்

உங்கள் FaceTime ஆடியோ அழைப்புக்கு ஒருவர் பதிலளிக்கவில்லை என்றால், நீங்கள் அழைக்கும் நபர் தனது iPadஇல் உள்நுழைந்துள்ள அதே Apple கணக்கில் ஒரு iPhoneஇல் உள்நுழைந்திருந்து, அதில் அமைப்புகள்  > செயலிகள் > ஃபோன் என்பதில் "நேரலை வாய்ஸ்மெயில்" என்பதை ஆன் செய்திருந்தால் வாய்ஸ்மெயில் அனுப்பும்படி கேட்கப்படுவீர்கள்.

குறிப்பு: நேரலை வாய்ஸ்மெயில் அம்சம் சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும் தன்மை குறித்த இணையதளத்தைப் பார்க்கவும்.

மீண்டும் அழைத்தல்

FaceTimeஇல் ஒருவரை மீண்டும் அழைக்க, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

  • “வீடியோவைப் பதிவுசெய்” திரையில் உள்ள “மீண்டும் அழை” என்பதைத் தட்டவும்.

  • உங்கள் அழைப்பு வரலாற்றில், நீங்கள் மீண்டும் அழைக்க விரும்பும் நபரின் (அல்லது குழுவின்) தொடர்புத் தகவலைக் கொண்ட டைலைத் தட்டி, “FaceTime வீடியோ” பட்டன் (FaceTime வீடியோ அழைப்பிற்கு) அல்லது “அழைப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

மெசேஜஸ் உரையாடலில் இருந்து FaceTime அழைப்பைத் தொடங்குதல்

iMessage உரையாடலில், நீங்கள் உரையாடுபவருடன் FaceTime அழைப்பைத் தொடங்கலாம்.

  1. மெசேஜஸ் உரையாடலின் மேல் வலதுபுறத்தில் உள்ள “FaceTime” பட்டன்-ஐத் தட்டவும்.

  2. “FaceTime ஆடியோ” அல்லது “FaceTime வீடியோ” என்பதைத் தட்டவும்.

நேரலை மொழிபெயர்ப்பு அம்சத்தைப் பயன்படுத்துதல்

Apple Intelligence* ஆன் செய்யப்பட்டிருந்தால், அதைப் பயன்படுத்தி மொழிபெயர்த்த நேரலை கேப்ஷன்களை FaceTimeஇல் பார்க்கலாம். மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளை மொழிபெயர்த்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

முக்கியம்: உங்கள் iPadஇல் இருந்து FaceTime செயலியை அகற்றினாலோ, iPadOSஇன் முந்தைய பதிப்பில் இயங்கிய FaceTimeஐ அகற்றினாலோ, செயலியை மீண்டும் பதிவிறக்கும் வரை உங்களால் FaceTime அழைப்புகளைச் செய்யவோ பெறவோ முடியாது, மேலும் உங்கள் iPadஇல் SharePlayஐப் பயன்படுத்த முடியாது. அமைப்புகள் மற்றும் தொடர்பு கார்டுகள் FaceTime விருப்பங்களைக் காட்டாது.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வேஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.