iPadஇல் உள்ள அறிவிப்புகளைப் பார்த்தல் மற்றும் அவற்றுக்குப் பதிலளித்தல்

புதியவற்றைக் கண்காணிப்பதற்கு அறிவிப்புகள் உதவுகின்றன. நீங்கள் அழைப்பைத் தவறவிட்டால், நிகழ்வின் தேதி மாற்றப்பட்டிருந்தால் மற்றும் பலவற்றை உங்களுக்குத் தெரிவிக்கின்றன. உங்கள் அறிவிப்புகளைப் பிரத்தியேகமாக்கலாம், அதன் மூலம் உங்களுக்கு முக்கியமானவற்றை மட்டுமே நீங்கள் பார்க்கலாம்.

குறிப்பு: ஒரு செயலியை நீங்கள் பயன்படுத்தும்போது அதில் இருந்து எப்படி அறிவிப்புகளைப் பெற விரும்புகிறீர்கள் என்று உங்களிடம் கேட்கப்படலாம். அதாவது உடனடியாக, அனுப்ப வேண்டாம் அல்லது திட்டமிடப்பட்ட சுருக்கவிவரமாக போன்ற விருப்பங்கள். அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் சென்று இந்த அமைப்புகளைப் பின்னர் மாற்றலாம்.

அறிவிப்பு மையத்தில் உங்கள் அறிவிப்புகளைக் கண்டறிதல்

நீங்கள் ஃபோகஸ் அல்லது தொந்தரவு செய்ய வேண்டாம் மூலம் அறிவிப்புகளை அமைதியாக்காத வரை, உங்களுக்கு வரும் அறிவிப்புகளை iPad காட்டும். நீங்கள் உடனடியாக வாசிக்கவில்லை என்றால், அது அறிவிப்பு மையத்தில் சேமிக்கப்படும், பின்னர் நீங்கள் அதைப் பார்க்கலாம்.

அறிவிப்பு மையத்தில் உங்கள் அறிவிப்புகளைப் பார்க்க, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • பூட்டுத் திரையில்: திரையின் நடுவில் இருந்து மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

  • பிற திரைகளில்: மேல் மையத்தில் இருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும். பழைய அறிவிப்புகள் ஏதேனும் இருந்தால், அவற்றைப் பார்க்க மேற்பகுதிக்கு ஸ்க்ரால் செய்யவும்.

அறிவிப்பு மையத்தை மூட, கீழ் இருந்து ஒரு விரலால் மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும் அல்லது (ஆதரிக்கப்பட்ட மாடல்களில்) முகப்பு பட்டனை அழுத்தவும்.

அறிவிப்புகளுக்குப் பதிலளித்தல்

அறிவிப்பு மையத்திலோ பூட்டுத் திரையிலோ நீங்கள் பல அறிவிப்புகளைப் பெறும்போது, அவை செயலியின் அடிப்படையில் குழுவாக்கப்படும், இதனால் அவற்றை எளிதாகப் பார்க்கலாம் நிர்வகிக்கலாம். சில செயலிகளில் இருந்து வரும் அறிவிப்புகள் செயலியில் இருக்கும் ஒழுங்கமைப்பு அம்சங்கள் மூலம் குழுவாக்கப்படலாம், அதாவது தலைப்பு அல்லது திரெட் அடிப்படையில். குழுவாக்கப்பட்ட அறிவிப்புகள் சிறிய ஸ்டேக்குகளாகக் காட்டப்படும், அதில் மிகச் சமீபத்திய அறிவிப்பு மேலே காட்டப்படும்.

பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • அறிவிப்புகள் குழுவைத் தனித்தனியாகப் பார்ப்பதற்காக விரிவாக்குதற்கு: குழுவைத் தட்டவும். குழுவை மூட “குறைவாகக் காட்டு” என்பதைத் தட்டவும்.

  • செயலியில் வசதி இருந்தால், அறிவிப்பைப் பார்க்க மற்றும் விரைவுச் செயல்களைச் செய்ய: அறிவிப்பைத் தொட்டுப் பிடிக்கவும்.

  • அறிவிப்பை அனுப்பிய செயலியைத் திறக்க: அறிவிப்பைத் தட்டி, “திற” என்பதைத் தட்டவும்.

  • iPad லாக் செய்யப்பட்டிருக்கும்போது அறிவிப்புக்குப் பதிலளிக்க: அறிவிப்பைத் தொட்டுப் பிடிக்கவும்.

அறிவிப்புச் சுருக்கவிவரத்தைத் திட்டமிடுதல்

உங்கள் அறிவிப்புகள் சுருக்கவிவரமாக அனுப்பப்படும் வகையில் திட்டமிடுவதன் மூலம் ஒரு நாளில் ஏற்படும் கவனச்சிதறல்களைக் குறைக்கலாம். எந்தெந்த அறிவிப்புகள் சுருக்கவிவரத்தில் சேர்க்கப்பட வேண்டும், எந்த நேரத்தில் அது உங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

அறிவிப்புச் சுருக்கவிவரம் உங்களுக்காகப் பிரத்தியேகமாக்கப்படுவதுடன், முன்னுரிமையின்படியும், உங்களின் தற்போதைய செயல்பாட்டின் அடிப்படையிலும் மிகவும் தொடர்புடைய அறிவிப்புகள் முதன்மையாகக் காட்டப்படும் வகையில் நுண்ணறிவைப் பயன்படுத்தி அவை வரிசைப்படுத்தப்படும். குறிப்பாக உங்களுக்குப் பணிகள் இல்லாத நேரத்தில் அறிவிப்புகளைப் பார்க்க சுருக்கவிவரம் உங்களை அனுமதிப்பதால் அது பயனுள்ளதாக இருக்கும். ஒரு செயல்பாட்டில் நீங்கள் கவனம் செலுத்தும்போது அறிவிப்புகளை ஃபில்டர் செய்ய ஃபோகஸை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் இதை நீங்கள் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லலாம்.

  1. அமைப்புகள்  > அறிவிப்புகள் > திட்டமிடப்பட்ட சுருக்கவிவரம் என்பதற்குச் சென்று, திட்டமிடப்பட்ட சுருக்கவிவரத்தை ஆன் செய்யவும்.

  2. உங்கள் சுருக்கவிவரம் காட்டப்பட வேண்டிய நேரத்தைத் அமைக்கவும். மற்றொரு சுருக்கவிவரத்தை நீங்கள் பெற விரும்பினால், “சுருக்க விவரத்தைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் சுருக்கவிவரத்தில் சேர்க்க வேண்டிய செயலிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. சுருக்கவிவரத்தில் உள்ள செயலிகளுக்குக் கீழே உள்ள “A - Z” என்பதைத் தட்டி உங்கள் சுருக்கவிவரத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் செயலி இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

    குறிப்பு: உங்கள் அறிவிப்புச் சுருக்கவிவரத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் ஒரு செயலி A முதல் Z வரையிலான பட்டியலில் காட்டப்படவில்லை எனில், அந்தச் செயலிக்கு “அறிவிப்புகளை அனுமதி” அமைப்பை நீங்கள் ஆன் செய்ய வேண்டியிருக்கலாம். அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் சென்று, செயலியைத் தட்டி “அறிவிப்புகளை அனுமதி” என்பதை ஆன் செய்யவும். அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல் கட்டுரையைப் பார்க்கவும்.

அறிவிப்புகளைப் பார்த்தல், மூடுதல், அழித்தல் மற்றும் ஒலிமுடக்குதல்

உங்கள் iPadஇல் அறிவிப்புகள் காட்டப்படும்போது, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • மற்றொரு செயலியைப் பயன்படுத்தும் போது நீங்கள் பெறும் அறிவிப்பை நிர்வகித்தல்: அதைப் பார்க்க அதைக் கீழே இழுத்து, பிறகு அதை நிராகரிக்க மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

  • அறிவிப்புகளை அழித்தல்: ஓர் அறிவிப்பு அல்லது அறிவிப்புகளின் குழுவில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “அழி” அல்லது “அனைத்தையும் அழி” என்பதைத் தட்டவும்.

  • ஒரு செயலியின் அறிவிப்புகளை ஒலிமுடக்குதல்: அறிவிப்பு அல்லது அறிவிப்புகளின் குழுவில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து “விருப்பங்கள்” என்பதைத் தட்டிய பிறகு, ஒரு மணிநேரம் அல்லது ஒரு நாளைக்குச் செயலியின் அறிவிப்புகளை ஒலிமுடக்குவதற்கான விருப்பத்தைத் தட்டவும். இது அவற்றை நேரடியாக அறிவிப்பு மையத்திற்கு அனுப்புவதுடன் பூட்டுத் திரையில் அவை காட்டப்படுதல், ஒலிகள் பிளே செய்யப்படுதல், திரை ஆன் செய்யப்படுதல் அல்லது பேனரில் அவை காட்சிப்படுத்தப்படுதலை இது தடுக்கும்.

    இந்த அறிவிப்புகளை மீண்டும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும், அறிவிப்பு மையத்தில் உள்ள அறிவிப்பில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “விருப்பங்கள்” என்பதைத் தட்டிய பிறகு “ஒலிமுடக்கு” என்பதைத் தட்டவும்.

  • ஒரு செயலி அல்லது அறிவிப்பு குழுவிற்கான அறிவிப்புகளை ஆ:ப் செய்தல்: அறிவிப்பு அல்லது அறிவிப்புகளின் குழுவில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து “விருப்பங்கள்” என்பதைத் தட்டி “ஆஃப் செய்” என்பதைத் தட்டவும்.

  • ஒரு செயலி அறிவிப்புகளைக் காட்டும் விதத்தை மாற்றுதல்: அறிவிப்பில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “விருப்பங்கள்” என்பதைத் தட்டி “அமைப்புகளைக் காட்டு” என்பதைத் தட்டவும். நீங்கள் மாற்றக்கூடிய அமைப்புகளைப் பற்றி அறிய அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல் கட்டுரையைப் பார்க்கவும்.

  • அறிவிப்பு மையத்தில் உள்ள உங்கள் அறிவிப்புகள் அனைத்தையும் அழித்தல்: அறிவிப்பு மையத்திற்குச் சென்று, “அறிவிப்புகளை அழி” பட்டன்-ஐத் தட்டி “அழி” என்பதைத் தட்டவும்.

  • அனைத்து அறிவிப்புகளையும் அமைதியாக்குதல்: “தொந்தரவு செய்ய வேண்டாம்” அம்சத்தை ஆன் செய்யவும். ”ஃபோகஸ்” அம்சத்தை ஆன் செய்தல் அல்லது திட்டமிடுதல் கட்டுரையைப் பார்க்கவும்.

நீங்கள் சில காலமாக ஒரு செயலியைப் பயன்படுத்தவில்லை என்றால், அந்தச் செயலியின் அறிவிப்புகளை ஆஃப் செய்யும்படி Siri பரிந்துரைக்கும்.

பூட்டுத் திரையில் சமீபத்திய அறிவிப்புகளைப் பார்த்தல்

பூட்டுத் திரையில் அறிவிப்பு மையத்திற்கான அணுகலை நீங்கள் அனுமதிக்கலாம்.

  1. அமைப்புகள் என்பதற்குச் சென்று, உங்கள் மாடலைப் பொறுத்து பின்வருவனவற்றில் ஒன்றைத் தட்டவும்.

    • Face ID & பாஸ்கோடு

    • Touch ID & பாஸ்கோடு

    • பாஸ்கோடு

  2. உங்கள் பாஸ்கோடை உள்ளிடவும்.

  3. அறிவிப்பு மையத்தை ஆன் செய்யவும் (“லாக் செய்யப்பட்டிருக்கும்போது அணுக அனுமதி” என்பதற்குக் கீழே இருக்கும்).

Apple Intelligence மூலம் அறிவிப்புகளின் சுருக்கவிவரத்தைப் பெறுதல்

Apple Intelligence* அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தால், நீண்ட அல்லது ஸ்டேக் செய்யப்பட்ட அறிவிப்புகளை ஒரே பார்வையில் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றின் சுருக்கவிவரத்தைப் பெற Apple Intelligenceஐப் பயன்படுத்தலாம். Apple Intelligence மூலம் அறிவிப்புகளின் சுருக்கவிவரத்தைப் பெறுதல் மற்றும் குறுக்கீடுகளைக் குறைத்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

Apple Intelligence மூலம் முன்னுரிமை அறிவிப்புகளைப் பார்த்தல்

Apple Intelligence* ஆன் செய்யப்பட்டிருந்தால், Apple Intelligenceஐப் பயன்படுத்தி நேர வரையறைக்குட்பட்ட அறிவிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றைத் தவறவிடாமல் பார்க்கலாம். Apple Intelligence மூலம் அறிவிப்புகளின் சுருக்கவிவரத்தைப் பெறுதல் மற்றும் குறுக்கீடுகளைக் குறைத்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வேஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், டர்க்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.