iPadஐ ஆன் அல்லது ஆஃப் செய்தல்

மேல் பட்டனைப் பயன்படுத்தி iPadஐ ஆன் செய்யலாம். iPadஐ ஆஃப் செய்ய, மேல் பட்டன் (சில மாடல்களில், ஒலியளவு பட்டன்களில் ஏதேனும் ஒன்றையும் சேர்த்து) அல்லது அமைப்புகளை பயன்படுத்தலாம்.

உங்கள் iPad எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றால், அதை ஆஃப் செய்து, மீண்டும் ஆன் செய்வதன் மூலம் அதை மறுதொடக்கம் செய்ய முயலலாம். அதை ஆஃப் செய்து ஆன் செய்வதால் சிக்கல் சரிசெய்யப்படவில்லை எனில், கட்டாய மறுதொடக்கத்தைச் செய்து பார்க்கவும்.

iPadஐ ஆன் அல்லது ஆஃப் செய்தல் (Face ID உள்ள மாடல்கள் அல்லது மேல் பட்டனில் Touch ID உள்ள மாடல்கள்)

உங்கள் iPadஇல் “முகப்பு” பட்டன் இல்லையென்றால் பின்வருவனவற்றைச் செய்யலாம்:

  • iPadஐ ஆன் செய்ய: Apple லோகோ காட்டப்படும் வரை மேல் பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

  • iPadஐ ஆஃப் செய்ய: மேல் பட்டனையும், ஒலியளவு பட்டன்களில் ஏதேனும் ஒன்றையும் ஒரே நேரத்தில் அழுத்திப் பிடித்த பிறகு ஸ்லைடரை இழுக்கவும்.

இரண்டு iPad மாடல்கள். இரண்டு iPad மாடல்களிலும் “மேல்” பட்டன் உள்ளது; ஒரு iPad மாடலில் பக்கவாட்டிலும், மற்றொன்றில் மேல் பகுதியிலும் “ஒலியளவு” பட்டன்கள் உள்ளன. அம்புக்குறிகள், மேல் பட்டன்களையும் ஒலியளவு பட்டன்களையும் சுட்டிக்காட்டுகின்றன.

iPadஐ ஆன் அல்லது ஆஃப் செய்தல் (முகப்பு பட்டன் உள்ள மாடல்கள்)

  • iPadஐ ஆன் செய்ய: Apple லோகோ காட்டப்படும் வரை மேல் பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

  • iPadஐ ஆஃப் செய்ய: மேல் பட்டனை அழுத்திப் பிடித்து ஸ்லைடரை இழுக்கவும்.

முகப்பு பட்டன் உள்ள iPad. மேல் பட்டனை ஓர் அம்புக்குறி சுட்டிக்காட்டுகிறது.

ஏதேனும் ஒரு மாடலை ஆஃப் செய்ய, அமைப்புகள்  > பொது அமைப்புகள் > ஷட் டவுன் என்பதற்குச் சென்று ஸ்லைடரை நீங்கள் இழுக்கலாம்.