iPad சாதனத்தில் உள்ள “கோப்புகள்” செயலில் கோப்புகளையும் கோப்புறைகளையும் மாற்றுதல்

iPadஇல் உள்ள ஆவணங்கள், படங்கள், கோப்புறைகள் மற்றும் பிற கோப்புகளை நீங்கள் நகலெடுக்கலாம், நகர்த்தலாம், பிரத்தியேகமாக்கலாம், பகிரலாம், நீக்கலாம்.

பதிவிறக்கங்கள், கடிதங்கள், குடும்பம் போன்ற பல கோப்புறைகள் மற்றும் இருப்பிடங்களைக் “கோப்புகள்” செயலி காட்டுகிறது. திரையின் கீழ்ப்பகுதியில் சமீபத்திய கோப்புகள், பகிர்ந்த கோப்புகள், உலாவுக பிரிவு ஆகியவற்றிற்கான பட்டன்கள் உள்ளன.

ஆவணங்களை மாற்றுதல் மற்றும் மறுவரிசைப்படுத்தல்

ஆதரிக்கப்படும் ஆவண வடிவத்தில் ஒரு கோப்பைப் பார்க்கும்போது, அந்த ஆவணத்தின் உள்ளடக்கங்களை நீங்கள் மாற்றலாம் மற்றும் மறுவரிசைப்படுத்தலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் விரும்பும் ஆவணத்தைத் திறந்து, அதன் தலைப்பைத் தட்டி, பின்னர் பின்வரும் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

    • ஃபோட்டோஸ் செயலியில் சேமித்தல்: ஃபோட்டோஸ் லைப்ரரியில் ஆவணத்தைச் சேமிக்கும்.

    • பிரதியெடு: ஆவணத்தின் நகலை உருவாக்கும்.

    • நகர்த்து: ஆவணத்தை வேறு இடத்திற்கு நகர்த்தும்.

    • மறுபெயரிடு: ஆவணத்தின் பெயரை மாற்றும்.

    • எக்ஸ்போர்ட் செய்: கோப்பின் நகலை வேறொரு கோப்பு வடிவத்தில் சேமிக்கும்.

    • அச்சிடு: ஆவணத்தை அச்சிடும்

ஆவணத்தைக் குறிக்க, மார்க்-அப் டூல்பார் பட்டன்-ஐத் தட்டவும்.

ஆவணத்தை மறுவரிசைப்படுத்த, ஹைலைட் செய்யப்பட்ட பக்கத்தைத் தொட்டுப் பிடித்து, அதைப் புதிய இடத்திற்கு இழுக்கவும்.

குறிப்பு: கோப்புகள் செயலியில் சில ஆவண வடிவங்கள் ஆதரிக்கப்படவில்லை.

உங்கள் கோப்புறைகளின் தோற்றத்தைப் பிரத்தியேகமாக்குதல்

உங்கள் கோப்புறைகளை எளிதில் கண்டறியும் வகையில் நிறத்தையும் ஐகான்களையும் சேர்க்கலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் பிரத்தியேகமாக்க விரும்பும் கோப்புறையைத் தொட்டுப் பிடித்து, “பிரத்தியேகமாக்கு” என்பதைத் தேர்வுசெய்யவும்.

  3. “குறிச்சொற்கள்” என்பதைத் தட்டி, ஒரு நிறத்தைத் தேர்வுசெய்து, “பின்செல்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. ஒரு ஐகானைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது கோப்புறையில் இமோஜியைச் சேர்க்க “இமோஜி” என்பதைத் தட்டவும்.

கோப்புறையிலிருந்து ஐகானை அகற்ற, ஐகான்களுக்குக் கீழே உள்ள “அழி” என்பதைத் தட்டவும்.

ஐகான், பட்டியல் அல்லது நெடுவரிசைக் காட்சிக்கு மாற்றுதல்

iPadஇல் உள்ள திறந்த இருப்பிடம் அல்லது கோப்புறையில் உள்ள கோப்புகள் மீதான உங்கள் காட்சியை மாற்றலாம்.

“கோப்புகள்” செயலியில் உங்கள் iCloud Driveஇல் உள்ள கோப்புகளும் கோப்புறைகளும் காட்டப்பட்டுள்ளன. திரையின் மேற்பகுதியில் ஐட்டங்களைத் தேர்ந்தெடுத்தல், புதிய கோப்புறைகளை உருவாக்குதல், காட்சியை மாற்றுதல் (பட்டியல், ஐகான்கள், நெடுவரிசைகள்), தேடுதல் ஆகியவற்றுக்கான பட்டன்கள் உள்ளன.
  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் மேலே உள்ள சமீபத்தியவை, பகிர்ந்தவை, அல்லது உலாவல் போன்ற இருப்பிடத்தைத் தட்டவும் அல்லது “சைடுபார்” பட்டன்-ஐத் தட்டி, சைடுபாரில் உள்ள இருப்பிடத்தைத் தட்டவும்.

  3. “பட்டியல்” பட்டன், “ஐகான்கள்” பட்டன் அல்லது “நெடுவரிசைக் காட்சி” பட்டன்-ஐத் தட்டி, கோப்புகளைக் காட்டுவதற்கான விதத்தைத் தேர்வுசெய்யவும்.

    பட்டியல் காட்சியில் கோப்பு படிநிலையை முழுமையாகப் பார்க்க, ஒரு கோப்புறையின் அருகில் உள்ள “ஃபார்வேர்டு செய்” பட்டன்-ஐத் தட்டி அதை விரிவாக்கவும்.

    நெடுவரிசைக் காட்சியில் ஒரு கோப்புறையின் படிநிலையை முழுமையாகப் பார்க்க, வலதுபக்க நெடுவரிசையில் உள்ள ஐட்டத்தைத் தட்டவும். ஒரு கோப்பின் முன்னோட்டத்தையும் அதன் மெட்டாடேட்டாவையும் (அதன் வகை, அளவு, உருவாக்கிய தேதி போன்றவை) பார்க்க, நெடுவரிசைக் காட்சியில் கோப்பைத் தட்டவும். (முன்னோட்டம் வலதுபக்க நெடுவரிசையில் தோன்றவில்லை என்றால், இடதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.) கோப்புகளைப் பார்க்கவும், கோப்புகள் செயலியை விட்டு வெளியேறாமல் அதில் பல்வேறு செயல்களைச் செய்யவும் கோப்பின் முன்னோட்டத்திற்குக் கீழே உள்ள “திற” என்பதைத் தட்டவும்.

எளிதாக அணுகுவதற்கு ஒரு கோப்புறையை Dockக்கு நகர்த்துதல்

நீங்கள் அடிக்கடி அணுகும் கோப்புறையை Dockக்கு நகர்த்துவதன் மூலம் அதை எளிதாகக் கண்டறியலாம் மற்றும் திறக்கலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. மெனு திறக்கப்படும் வரை, நீங்கள் நகர்த்த விரும்பும் கோப்புறையைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.

  3. மெனுவில் “இதில் சேர்” என்பதைத் தேர்வுசெய்து, “Dock” என்பதைத் தட்டவும்.

Dockஇல் உள்ள கோப்புறையைத் தட்டி, அதை விரிவுபடுத்தலாம், அதில் உள்ள கோப்புகளைப் பார்க்கலாம். செயலியின் கோப்புறையில் உள்ள ஒரு கோப்பைத் திறக்க, அந்தக் கோப்பை Dockஇல் உள்ள செயலிக்கு இழுக்கவும் அல்லது செயலியை ஏற்கெனவே திறந்திருந்தால், செயலியின் சாளரத்திற்கு நேரடியாக இழுக்கவும். எடுத்துக்காட்டாக மெசேஜஸ் செயலி திறந்திருந்தால், கோப்புறையில் இருந்து கோப்பை நேரடியாக நீங்கள் திறந்து வைத்திருக்கும் உரையாடலுக்குள் இழுக்கலாம்.

சைடுபாரை மறுவரிசைப்படுத்துதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. சைடுபாரைக் காட்ட “சைடுபார்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. சைடுபாரின் மேல்பகுதியில் உள்ள “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, "சைடுபாரைத் திருத்து" என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

கோப்பு அல்லது கோப்புறையை நீக்குதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் நீக்க விரும்பும் கோப்பு அல்லது கோப்புறையைக் கண்டறியவும்.

  3. ஐட்டத்தைத் தொட்டுப் பிடித்து, “நீக்கு” என்பதைத் தட்டவும்.