AutoMix

AutoMix அம்சம் DJ செய்வதைப் போன்று சீரான வகையில் பாடல்களை டிரான்சிஷன் செய்யும். iOS 26, iPadOS 26, macOS Tahoe, visionOS 26 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைக் கொண்ட iPhone, iPad, Apple சிலிகான் கொண்ட Mac, Apple Vision Pro ஆகியவற்றில் இருக்கும் Apple Music கேட்டலாகில் இசையுடன் AutoMix அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

இசையைப் பொறுத்து சிறந்த டிரான்சிஷனை AutoMix தானாகவே தேர்ந்தெடுக்கும். உதாரணத்திற்கு, டிராக்கின் தொடக்கம் அல்லது முடிவில் உள்ள நிசப்தத்தை AutoMix அம்சம் அகற்றலாம், அதிக டிரான்ஸிஷன் தேவைப்படாத இடங்களில் எளிய முறையில் கிராஸ்ஃபேடு செய்யலாம்.

குறிப்பு: ஆல்பங்களும் சில வகைப்பிரிவுகளும் டிரான்ஸிஷன்கள் ஏதுமின்றி அப்படியே பிளே செய்யப்படும்.

AutoMix இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும். வரிசையிலோ அமைப்புகளிலோ நீங்கள் அதை ஆஃப் செய்யலாம்.