iPadஇல் “கிறுக்கல்” அம்சத்தைப் பயன்படுத்தி உரையை உள்ளிடுதல்

ஆதரிக்கப்பட்ட மாடல்களில், நீங்கள் Apple Pencilஐப் பயன்படுத்தலாம் (தனியாக விற்கப்படுகிறது) மற்றும் உரையை உள்ளிட “கிறுக்கல்” அம்சத்தைப் பயன்படுத்தலாம். திரையில் காட்டப்படும் கீபோர்டைத் திறக்காமல் அல்லது பயன்படுத்தாமல் நீங்கள் மெசேஜுக்கு விரைவாகப் பதிலளிக்கலாம், நினைவூட்டலை எழுதிக்கொள்ளலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம். “கிறுக்கல்” அம்சம் உங்கள் கையெழுத்தை நேரடியாக iPadஇல் உரையாக மாற்றும், எனவே நீங்கள் எழுதியவை தனிப்பட்டதாக இருக்கும்.

குறிப்பு: “கிறுக்கல்” அம்சம் பல மொழிகளில் கிடைக்கிறது. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையதளத்தைப் பார்க்கவும்.

எந்தவொரு உரைப் புலத்திலும் உரையை உள்ளிட Apple Pencilஐப் பயன்படுத்துதல்

  1. எந்தவொரு உரைப் புலத்திலும் Apple Pencilஐப் பயன்படுத்தி நீங்கள் எழுதியதும் “கிறுக்கல்” அம்சம் உங்கள் கையெழுத்தைத் தானாகவே டைப் செய்த உரையாக மாற்றும்.

    உரைப் புலத்தின் விளிம்புகளைத் தாண்டி நீங்கள் எழுதினாலும் “கிறுக்கல்” அம்சம் வேலை செய்யும்.

  2. ஒரு செயல் சுருக்கவழியைப் பயன்படுத்த, “கிறுக்கல்” டூல்பாரைத் தட்டவும்.

    கிடைக்கக்கூடிய செயல்கள் நீங்கள் பயன்படுத்தும் செயலியைப் பொறுத்தது. அவற்றில், செயல்தவிர் பட்டன், கீபோர்டைக் காட்டு பட்டன் மற்றும் பல இருக்கலாம்.

    நீங்கள் உரையை உள்ளிடும்போது டூல்பார் தானாகச் சிறிதாக்கப்பட, “எலிப்ஸிஸ்” பட்டன்-ஐத் தட்டி “தானாகச் சிறிதாக்கு” என்பதை ஆன் செய்யவும். முழு டூல்பாரையும் பார்க்க, சிறிதாக்கப்பட்ட பதிப்பைத் தட்டவும்.

குறிப்புகள் மற்றும் Freeform செயலியில் உரையை உள்ளிட Apple Pencilஐப் பயன்படுத்துதல்

  1. குறிப்புகள் அல்லது Freeform செயலியில், கருவிகள் தொகுப்பைப் பார்க்க “மார்க்-அப் ஸ்விட்ச்” பட்டன் ஆஃப் செய்யப்பட்டுள்ளது-ஐத் தட்டவும்.

  2. கருவிகள் தொகுப்பில், கையெழுத்துக் கருவியை தட்டவும் (பேனாவிற்கு இடப்பக்கத்தில் இருக்கும்).

  3. Apple Pencil மூலம் நீங்கள் எழுதியதும் “கிறுக்கல்” அம்சம் உங்கள் கையெழுத்தைத் தானாகவே டைப் செய்த உரையாக மாற்றும்.

Apple Pencil மூலம் உரையைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் திருத்துதல்

Apple Pencil மற்றும் “கிறுக்கல்” அம்சத்தைப் பயன்படுத்தி உரையை உள்ளிடும்போது, பின்வருவனவற்றைச் செய்யலாம்:

  • ஒரு வார்த்தையை நீக்குதல்: அதை அடிக்கவும்.

  • உரையைச் சேர்த்தல்: உரைப் பகுதியில் தொட்டுப்பிடித்ததும் திறக்கப்படும் இடத்தில் எழுதவும்.

  • எழுத்துகளை இணைத்தல் அல்லது பிரித்தல்: அவற்றுக்கிடையே செங்குத்தாக கோடிடவும்.

  • உரையைத் தேர்ந்தெடுக்க: உரையைத் தேர்ந்தெடுப்பதற்கும், எடிட்டிங் விருப்பங்களைப் பார்ப்பதற்கும் அதைச் சுற்றி ஒரு வட்டத்தை வரையவும் அல்லது அதை அடிக்கோடிடவும். தேர்வை மாற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட உரையின் தொடக்கத்தில் இருந்து அல்லது இறுதியில் இருந்து இழுக்கவும்.

  • ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்: ஒரு வார்த்தையை இருமுறை தட்டவும்.

  • ஒரு பத்தியைத் தேர்ந்தெடுக்கவும்: பத்தியில் உள்ள ஒரு வார்த்தையை மூன்று முறை தட்டவும் அல்லது பத்திக்கு மேல் Apple Pencilஐ வைத்து இழுக்கவும்.

உங்கள் கையெழுத்தை உரையாக மாற்றுவதை நிறுத்துதல்

அமைப்புகள்  > Apple Pencil என்பதற்குச் சென்று, “கிறுக்கல்” அம்சத்தை ஆஃப் செய்யவும்.