iPadஐப் பயன்படுத்துவதற்கான அடிப்படைச் சைகைகளைக் கற்றுக்கொள்ளுதல்
தட்டுதல், தொட்டுப் பிடித்தல், ஸ்வைப் செய்தல், ஸ்க்ரால் செய்தல், ஜூம் செய்தல் போன்ற சில எளிய சைகைகளைப் பயன்படுத்தி iPad மற்றும் அதன் செயலிகளைக் கட்டுப்படுத்தலாம்.
குறியீடு | சைகை | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தட்டுதல். திரையில் உள்ள ஐட்டத்தை ஒரு விரலால் தொட்டு எடுக்கவும். எடுத்துக்காட்டாக, ஒரு செயலியைத் திறக்க, முகப்புத் திரையில் அதன் ஐகானைத் தட்டவும். | |||||||||||
தொட்டுப் பிடித்தல். ஏதாவது நிகழும் வரை திரையில் உள்ள ஐட்டத்தை அழுத்தவும். உதாரணமாக, நீங்கள் முகப்புத் திரையின் வால்பேப்பரைத் தொட்டு பிடித்தால், செயலி ஐகான்கள் ஜிகிள் ஆகும். | |||||||||||
ஸ்வைப் செய்தல். ஒரு விரலை திரையின் குறுக்கே விரைவாக நகர்த்தவும். உதாரணமாக, கூடுதல் செயலிகளைப் பார்க்க, முகப்புத் திரையில் இடது பக்கம் ஸ்வைப் செய்யவும். | |||||||||||
ஸ்க்ரால் செய்தல். ஒரு விரலை எடுக்காமல் திரையின் குறுக்கே நகர்த்தவும். உதாரணமாக, ஃபோட்டோஸ் செயலியில், மேலும் பார்க்க பட்டியலை மேலே அல்லது கீழே இழுக்கலாம். விரைவாக ஸ்க்ரால் செய்ய ஸ்வைப் செய்யவும்; ஸ்க்ரால் செய்வதை நிறுத்த திரையைத் தொடவும். | |||||||||||
ஜூம் செய்தல். திரையில் இரண்டு விரல்களை அருகருகே வைக்கவும். பெரிதாக்க அவற்றை விரிவாக்கவும் அல்லது சிறிதாக்க அவற்றை அருகருகே கொண்டுவரவும். ஒரு புகைப்படம் அல்லது இணையப் பக்கத்தையும் பெரிதாக்க இருமுறை தட்டலாம், சிறிதாக்க மீண்டும் இருமுறை தட்டலாம். மேப்ஸில், இருமுறை தட்டிப் பிடித்து, பெரிதாக்க மேலே இழுக்கவும் அல்லது சிறிதாக்க கீழே இழுக்கவும். | |||||||||||
Magic Trackpad அல்லது Magic Mouseஐப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் டிராக்பேடு அல்லது மவுஸில் செயல்படும் சைகைகளுக்கு iPadக்கான டிராக்பேடு சைகைகள் அல்லது iPadக்கான மவுஸ் செயல்கள் மற்றும் சைகைகள் என்பதைப் பார்க்கவும்.




