iPadஇல் செயலிகள் மற்றும் இணையத்தில் Apple Payஐப் பயன்படுத்துதல்

Apple Pay பட்டன் காட்டப்படும் இடங்களிலெல்லாம் Apple Pay மூலம் செயலிகள், செயலி கிளிப்கள் மற்றும் இணையத்தில் நீங்கள் பலவற்றை வாங்கலாம்.

குறிப்பு: Apple Pay மற்றும் அதன் அம்சங்கள் குறிப்பிட்ட சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கும். Apple Payஐ ஆதரிக்கும் நாடுகள் மற்றும் வட்டாரங்கள் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டங்களின் விலைகளுடன் ஷாப்பிங் கார்ட்டைக் காட்டுகின்ற Safari இணையப்பக்கம். Apple Pay பட்டன் கீழ் வலதுபக்கத்தில் உள்ளது.

செயலிகள், செயலி கிளிப்கள் அல்லது Safariஇல் பணம் செலுத்துதல்

  1. செக்-அவுட்டின் போது, Apple Pay பட்டனைத் தட்டவும்.

  2. பேமெண்ட் தகவல்களைச் சரிபார்த்து பின்வருவனவற்றில் ஒன்றை அமைக்கலாம்:

    • பேமெண்ட் முறை

      நீங்கள் வேறு பேமெண்ட் கார்டைத் தேர்வுசெய்யலாம். வெகுமதிகள் அல்லது தவணைகள் மூலமாகவும் பணம் செலுத்தலாம் (தகுதி மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட சந்தைகளில் உள்ள பங்கேற்கும் வங்கிகள் மற்றும் கார்டு வழங்குநரின் கார்டுகளில் இந்த வசதிகள் கிடைக்கும்).

    • பில்லிங் மற்றும் ஷிப்பிங் முகவரிகள்

    • தொடர்புத் தகவல்

      உதவிக்குறிப்பு: நீங்கள் iCloud+க்குச் சந்தா சேரும்போது, உங்கள் உண்மையான மின்னஞ்சல் முகவரியைத் தனிப்பட்டதாக வைத்திருக்க எனது மின்னஞ்சலை மறை என்பதைப் பயன்படுத்தலாம்.

  3. பேமெண்ட்டை நிறைவுசெய்ய, உங்கள் Face ID, Touch ID அல்லது பாஸ்கோடு மூலம் அங்கீகரிக்கவும்.

Apple Payஐப் பயன்படுத்தி வெகுமதிகள் மூலம் பணம் செலுத்துதல் மற்றும் Apple Payஐப் பயன்படுத்தி தவணைகளில் பணம் செலுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரைகளைப் பார்க்கவும்.

Mac, Windows சாதனங்கள் மற்றும் பிற சாதனங்களில் உள்ள மூன்றாம் தரப்பு உலாவிகளில் Apple Payஐப் பயன்படுத்துதல்

ஆதரிக்கப்படும் மூன்றாம் தரப்பு இணைய உலாவியில் நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது, உங்கள் iPadஇல் உள்ள கட்டணத் தகவல்களைப் பயன்படுத்தி Apple Pay மூலம் வாங்குதலை முடிக்கலாம். (அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை.)

  1. செக்-அவுட்டில், Apple Payஐ கிளிக் செய்த பிறகு உங்கள் iPad கேமராவைப் பயன்படுத்தி குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

  2. உங்கள் iPadஇல், பேமெண்ட் தகவல்களைச் சரிபார்த்து, பின்வருவனவற்றில் ஒன்றை அமைக்கவும்:

    • பேமெண்ட் முறை

    • பில்லிங் மற்றும் ஷிப்பிங் முகவரிகள்

    • தொடர்புத் தகவல்

  3. பேமெண்ட்டை நிறைவுசெய்ய, உங்கள் Face ID, Touch ID அல்லது பாஸ்கோடு மூலம் அங்கீகரிக்கவும்.

முன் அங்கீகரிக்கப்பட்ட பேமெண்ட்டுகளைப் பார்த்தல்

சந்தாக்கள் போன்ற எதிர்கால மற்றும் தொடர்ச்சியான கட்டணங்களுக்காக Apple Pay மூலம் செலுத்திய முன் அங்கீகரிக்கப்பட்ட பேமெண்ட்டுகளை நீங்கள் பார்க்கலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “வாலெட் & Apple Pay” என்பதைத் தட்டி, “முன் அங்கீகரிக்கப்பட்ட பேமெண்ட்டுகள்” என்பதைத் தட்டவும்.

  3. விவரங்களைப் பார்க்க, ஒரு பேமெண்ட்டைத் தட்டவும்.

  4. உங்கள் சேவையை ரத்துசெய்ய அல்லது பேமெண்ட் முறைகளை நிர்வகிக்க, வணிகரை நேரடியாகத் தொடர்புகொள்ளவும். (பங்கேற்கும் வணிகர்களைப் பொறுத்தவரை, “நிர்வகி” என்பதைத் தட்டவும்.)

  5. வணிகர் உங்கள் கார்டில் இருந்து தானாக கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க, “பேமெண்ட் அங்கீகரிப்பைத் திரும்பப் பெறு” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: பேமெண்ட் அங்கீகரிப்பை ரத்துசெய்தால் உங்கள் சேவை ரத்துசெய்யப்படாது.