AirPodகளைச் சுத்தம் செய்வது எப்படி?

உங்கள் AirPodகளைப் பராமரிக்க அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.

உங்கள் AirPodகளைக் கண்டறியுங்கள். இல்லையென்றால், உங்கள் AirPods Pro அல்லது AirPods Maxஸைச் சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

AirPodகளின் மெஷ்களைச் சுத்தம் செய்தல்

AirPods 3 மற்றும் AirPods 4 மெஷ்களைச் சுத்தம் செய்ய, உங்களுக்கு Belkin AirPods கிளீனிங் கிட் தேவை அல்லது இவை தேவை:

  • Bioderma, Neutrogena போன்றவற்றுடைய, PEG-6 கேப்ரிலிக்/கேப்ரிக் கிளிசரைடுகள் அடங்கிய மைசெல்லர் வாட்டர்

  • டிஸ்டில்டு வாட்டர்

  • குழந்தைகள் பயன்படுத்தும் மென்மையான டூத் பிரஷ்

  • இரண்டு சிறிய கப்கள்

  • ஒரு பேப்பர் டவல்

AirPods 4 மெஷ்களைச் சுத்தம் செய்தல்

AirPods 4ல் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள மெஷ்களை மட்டும் சுத்தம் செய்யவும். மற்ற பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டாம்.

AirPods 4 மெஷ்கள்.
  1. ஒரு கப்பில் சிறிதளவு மைசெல்லர் வாட்டரைச் சேர்க்கவும்.

  2. மைசெல்லர் வாட்டரில் டூத் பிரஷ்ஷை முழுமையாக நனைக்கவும்.

  3. மெஷ் மேல்நோக்கி இருக்கும்படி AirPod ஐப் பிடிக்கவும்.

  4. சுமார் 15 வினாடிகள் மெஷ்ஷை வட்ட வடிவில் பிரஷ் செய்யவும்.

  5. AirPod ஐத் திருப்பி அதைப் பேப்பர் டவலில் துடைக்கவும். மெஷ்ஷில் பேப்பர் டவல் படும்படி சுத்தம் செய்யவும்.

  6. நீங்கள் சுத்தம் செய்ய விரும்பும் எல்லா மெஷ்ஷையும் 2 முதல் 5 வரை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி மேலும் இரண்டு முறை (மொத்தம் மூன்று முறை) சுத்தம் செய்யவும்.

  7. பிரஷ்ஷில் இருந்து மைசெல்லர் வாட்டரை நீக்க, டிஸ்டில்டு வாட்டரில் பிரஷ்ஷைக் கழுவவும். அதன்பிறகு, நீங்கள் சுத்தம் செய்த எல்லா மெஷ்ஷையும் டிஸ்டில்டு வாட்டரைப் பயன்படுத்தி 1 முதல் 5 வரை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி சுத்தம் செய்யவும்.

  8. உங்கள் AirPods ஐப் பயன்படுத்தும் முன்போ சார்ஜிங் கேஸில் வைக்கும் முன்போ அவற்றைக் குறைந்தது 2 மணிநேரத்திற்கு முழுமையாக உலர வைக்கவும்.

AirPods 3 மெஷ்களைச் சுத்தம் செய்தல்

AirPods 3ல் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள மெஷ்களை மட்டும் சுத்தம் செய்யவும். மற்ற பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டாம்.

உங்கள் AirPods 3ல் ஸ்நோர்கெல் மெஷ், கண்ட்ரோல் லீக் மெஷ், மேற்புற மைக் ஆகியவற்றைச் சுத்தம் செய்யலாம்.
  1. ஒரு கப்பில் சிறிதளவு மைசெல்லர் வாட்டரைச் சேர்க்கவும்.

  2. மைசெல்லர் வாட்டரில் டூத் பிரஷ்ஷை முழுமையாக நனைக்கவும்.

  3. மெஷ் மேல்நோக்கி இருக்கும்படி AirPod ஐப் பிடிக்கவும்.

  4. சுமார் 15 வினாடிகள் மெஷ்ஷை வட்ட வடிவில் பிரஷ் செய்யவும்.

  5. AirPod ஐத் திருப்பி அதைப் பேப்பர் டவலில் துடைக்கவும். மெஷ்ஷில் பேப்பர் டவல் படும்படி சுத்தம் செய்யவும்.

  6. நீங்கள் சுத்தம் செய்ய விரும்பும் எல்லா மெஷ்ஷையும் 2 முதல் 5 வரை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி மேலும் இரண்டு முறை (மொத்தம் மூன்று முறை) சுத்தம் செய்யவும்.

  7. பிரஷ்ஷில் இருந்து மைசெல்லர் வாட்டரை நீக்க, டிஸ்டில்டு வாட்டரில் பிரஷ்ஷைக் கழுவவும். அதன்பிறகு, நீங்கள் சுத்தம் செய்த எல்லா மெஷ்ஷையும் டிஸ்டில்டு வாட்டரைப் பயன்படுத்தி 1 முதல் 5 வரை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி சுத்தம் செய்யவும்.

  8. உங்கள் AirPodகளைப் பயன்படுத்தும் முன்போ சார்ஜிங் கேஸில் வைக்கும் முன்போ அவற்றைக் குறைந்தது 2 மணிநேரத்திற்கு முழுமையாக உலர வைக்கவும்.

AirPodகளைச் சுத்தம் செய்தல்

உங்கள் AirPodகளில் சோப்புகள், ஷாம்புகள், கண்டிஷனர்கள், லோஷன்கள், வாசனைத் திரவியங்கள், கரைதிரவங்கள், டிட்டர்ஜெண்ட், அமிலங்கள் அல்லது அமில உணவுகள், பூச்சி விரட்டி, சன்ஸ்கிரீன், எண்ணெய், ஹேர் டை போன்றவற்றால் கறைகள் அல்லது பிற சேதங்கள் ஏற்பட்டுவிட்டால்:

  1. ஒரு துணியை நல்ல தண்ணீரில் சற்று ஈரமாக்கி அதை வைத்து அவற்றைச் சுத்தம் செய்யவும். அதன்பின், மென்மையான, உலர்ந்த, பஞ்சு இல்லாத துணியால் அவற்றை ஈரமில்லாமல் துடைக்கவும்.

  2. அவற்றைப் பயன்படுத்தும் முன்போ சார்ஜிங் கேஸில் வைக்கும் முன்போ குறைந்தது 2 மணிநேரத்திற்கு அவற்றை முழுமையாக உலர வைக்கவும்.

உங்கள் AirPodகளைத் தண்ணீரில் நனைப்பதைத் தவிர்க்கவும், அவற்றைச் சுத்தம் செய்ய கூர்மையான அல்லது சிராய்ப்பு ஏற்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

AirPodகளின் சார்ஜிங் கேஸைச் சுத்தம் செய்தல்

  1. சார்ஜிங் போர்ட்டில் அழுக்கு இருந்தால் சுத்தமான, உலர்ந்த, மென்மையான பிரஷ்ஷைப் பயன்படுத்தி அதை அகற்றவும். மெட்டல் பகுதிகள் சேதமடைவதைத் தவிர்க்க, சார்ஜிங் போர்ட்களில் எதையும் வைக்காதீர்கள்.

  2. சார்ஜிங் கேஸை மென்மையான, உலர்ந்த, பஞ்சு இல்லாத துணியால் சுத்தம் செய்யவும். தேவைப்பட்டால், ஐசோபுரோப்பைல் ஆல்கஹாலில் துணியைச் சற்று நனைத்துக்கொள்ளலாம்.

  3. சார்ஜிங் கேஸை உலர வைக்கவும்.

சார்ஜிங் போர்ட்களில் எந்தத் திரவமும் படாமல் பார்த்துக் கொள்ளவும், அத்துடன் சார்ஜிங் கேஸைச் சுத்தம் செய்ய சிராய்ப்பு ஏற்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

சரும எரிச்சலைத் தவிர்த்தல்

  • AirPods 3 அல்லது AirPods 4 பயன்படுத்தி உடற்பயிற்சிகள் செய்த பிறகு அல்லது வியர்வை, சோப்பு, ஷாம்பு, மேக்-அப், சன்ஸ்கிரீன், சரும எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய லோஷன்கள் போன்ற திரவங்கள் உங்கள் சாதனத்தில் பட்டுவிட்டால், அதைச் சுத்தம் செய்து உலர வைக்கவும். AirPodகளையும் உங்கள் சருமத்தையும் சுத்தமாகவும் ஈரமில்லாமலும் பராமரிப்பதன் மூலம் உங்கள் சாதனம் பயன்படுத்துவதற்கு மிக வசதியாக இருக்கும், மேலும் அதைச் சேதத்தில் இருந்து பாதுகாத்து நீண்ட காலம் நல்ல நிலையில் வைத்திருக்கவும் முடியும்.

  • குறிப்பிட்ட சில பொருட்களால் ஒவ்வாமை அல்லது விளைவுகள் ஏற்படும் என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால், AirPodகளில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்.

  • AirPodகளின் வியர்வைப்புகா மற்றும் நீர்ப்புகா தன்மை குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

கூடுதல் உதவி பெறுங்கள்

வெளியிடப்பட்ட தேதி: