உங்கள் iPhone அல்லது iPad இல் ஈமெயில் கணக்கைச் இணைக்கவும்
உங்கள் iOS சாதனத்தில் உள்ள Mail பயன்பாட்டில் ஈமெயில் கணக்கை அமைக்கவும் - தானியக்கமாக அல்லது கைமுறையாக.
நீங்கள் ஒரு பொதுவான ஈமெயில் வழங்குநரைப் பயன்படுத்தினால் தானியக்கமாக அமைக்கவும்.
நீங்கள் iCloud, Google, Microsoft Exchange அல்லது Yahoo போன்ற ஈமெயில் வழங்குநரைப் பயன்படுத்தினால், உங்கள் ஈமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி Mail தானியக்கமாக ஈமெயில் கணக்கை அமைக்கும். அது எப்படி என்பது இங்கே:
அமைப்புகள் > பயன்பாடுகள் > Mail என்பதற்குச் சென்று, பின்னர் Mail கணக்குகளைத் தட்டவும்.
கணக்கைச் சேர் என்பதைத் தட்டவும், பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். தேவைப்பட்டால் பட்டியலிலிருந்து உங்கள் ஈமெயில் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்.
அறிவுறுத்தல்களைப் பின்பற்றி உங்கள் ஈமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
நீங்கள் அடுத்து என்பதைக் கண்டால், அடுத்து என்பதைத் தட்டிவிட்டு உங்கள் கணக்கைச் சரிபார்க்க Mail வரும் வரை காத்திருக்கவும்.
சேமி என்பதைக் கண்டால், சேமி என்பதைத் தட்டவும்.
உங்கள் ஈமெயில் கணக்குடன் பொருந்தக்கூடிய பட்டியலிடப்பட்ட ஈமெயில் வழங்குநரை தெரிந்து கொள்ளவும்
குறைவாகப் பயன்படுத்தப்படும் ஈமெயில் வழங்குநர்களுக்கு கைமுறையாக அமைக்கவும்.
நீங்கள் உங்கள் ஈமெயில் கணக்கை கைமுறையாக அமைக்க வேண்டும் என்றால், உங்கள் கணக்கிற்கான ஈமெயில் அமைப்புகளை அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவர்களைத் தெரியவில்லை என்றால், நீங்கள் இல் அவர்களை தேடலாம் அல்லது உங்கள் ஈமெயில் வழங்குநரைத் தொடர்பு கொள்ளலாம். அதன் பின் இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
அமைப்புகள் > பயன்பாடுகள் > Mail என்பதற்குச் சென்று, பின்னர் Mail கணக்குகளைத் தட்டவும்.
ணக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.
உங்கள் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு, அடுத்து என்பதைத் தட்டவும்.
பிற கணக்கைச் சேர் என்பதைத் தட்டவும், பின்னர் Mail கணக்கைத் தட்டவும்.
உங்கள் பெயர், ஈமெயில் முகவரி, கடவுச்சொல் மற்றும் உங்கள் கணக்கிற்கான விளக்கத்தை உள்ளிடவும்.
அடுத்து என்பதைத் தட்டவும். Mail உங்கள் ஈமெயில் அமைப்புகளைக் கண்டறிந்து உங்கள் கணக்கு அமைப்பை செய்து முடிக்க முயற்சிக்கும். Mail உங்கள் ஈமெயில் அமைப்புகளை கண்டறிந்தால், உங்கள் கணக்கு அமைப்பை முடிக்க முடிந்தது என்பதைத் தட்டவும்.
Mail உங்கள் கணக்கு அமைப்புகளை தானியக்கமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்
Mail உங்கள் ஈமெயில் அமைப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் அவற்றை கைமுறையாக உள்ளிட வேண்டும். அடுத்து என்பதைத் தட்டி, பிறகு் இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
உங்கள் புதிய கணக்கிற்கு IMAP அல்லது POP ஐத் தேர்வு செய்யவும். எதைத் தேர்வு செய்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உங்கள் ஈமெயில் வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்.
உள்வரும் Mail சேவையகம் மற்றும் வெளிச்செல்லும் Mail சேவையகத்திற்கான தகவலை உள்ளிடவும். அதற்கு பின் அடுத்து என்பதைத் தட்டவும். உங்களிடம் இந்த தகவல் இல்லையென்றால், உங்கள் ஈமெயில் வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் ஈமெயில் அமைப்புகள் சரியாக இருந்தால், முடிப்பதற்கு, சேமி என்பதைத் தட்டவும். ஈமெயில் அமைப்புகள் தவறாக இருந்தால், அவற்றைத் திருத்தும்படி உங்களிடம் கேட்கப்படும்.
உங்கள் ஈமெயில் கணக்கை இன்னும் அமைக்க அல்லது உங்கள் ஈமெயில் அமைப்புகளைச் சேமிக்க முடியவில்லை என்றால், உங்கள் ஈமெயில் வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும்.