உங்கள் AppleCare திட்டம் குறித்த தகவல்களைக் கண்டறியவும்
உங்கள் சாதனம் AppleCare திட்டத்தின் கீழ் உள்ளதா எனச் சரிபார்த்து, உங்கள் AppleCare பாதுகாப்பு குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளவும்.
உங்கள் சாதனம் AppleCare திட்டத்தின் கீழ் உள்ளதா எனச் சரிபார்க்கவும்
AppleCare பாதுகாப்புத் திட்டம் குறித்த தகவல்களை அறிய, உங்கள் சாதனத்தில் உள்ள AppleCare & Warranty அமைப்புகளைத் திறந்து பார்க்கலாம். அல்லது, அமைப்புகள் பகுதிக்குச் சென்று, பொது என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் AppleCare & Warranty என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஆன்லைனில் உங்கள் பாதுகாப்பைச் சரிபார்க்கும்போதும் உங்கள் திட்ட விவரங்களைக் கண்டறியலாம்.
உங்கள் AppleCare திட்டத்தைக் கண்டறிய முடியாவிட்டால் என்ன செய்வது என்பதை அறியவும்
அனைத்து AppleCare தயாரிப்புகளும் எல்லா நாடுகளிலும் அல்லது பிராந்தியங்களிலும் கிடைப்பதில்லை.
உங்கள் AppleCare பாதுகாப்பு காலாவதியாகும் தேதியைக் கண்டறியவும்
உங்கள் iPhone அல்லது iPad-இல், அமைப்புகள் பகுதிக்குச் சென்று பொது என்பதைத் தட்டவும். AppleCare & Warranty என்பதைத் தட்டி, பின்னர் உங்கள் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் Mac-இல், திரையின் மூலையில் உள்ள Apple மெனுவைக் கிளிக் செய்யவும். சிஸ்டம் அமைப்புஜ்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் பொது என்பதைக் கிளிக் செய்யவும். AppleCare & Warranty என்பதைக் கிளிக் செய்து, பின்னர் உங்கள் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
mysupport.apple.com தளத்திற்குச் சென்று, உங்கள் Apple கணக்கில் உள்நுழையவும். பின்னர் உங்கள் சாதனத்தைத் தேர்ந்தெடுத்து, வன்பொருள் பழுதுபார்ப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட, உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆதரவு சேவைகள் குறித்த விவரங்களைப் பார்க்கவும்.
ஒப்பந்த எண் அல்லது பாதுகாப்புச் சான்றைப் பெறவும்
mysupport.apple.com தளத்திற்குச் செல்லவும்.
உங்கள் Apple கணக்கில் உள்நுழையவும்.
உங்கள் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
காப்பீட்டுச் சான்றைக் காண்க என்பதைக் கிளிக் செய்யவும். காப்பீட்டுக்கான ஆதாரம் காட்டப்படவில்லை என்றால், இரு-காரணி அங்கீகார வசதியுடன் உங்கள் Apple கணக்கை அமைத்துள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் உதவி தேவையா?
என்ன நடக்கிறது என்பது பற்றித் தொடர்ந்து சொல்லுங்கள், அடுத்து நீங்கள் என்ன செய்யலாம் என்பதை நாங்கள் பரிந்துரைப்போம்.